சமூகப் பெயர்வு என்றால் என்ன ?

சமூகப் -பெயர்வு -என்றால் -என்ன ?
 சமூகப் பெயர்வு

சமூகத்தில் ஒருவர் தான் இருக்கும் நிலையிலிருந்து மற்றுமொரு நிலைக்குச் செல்வதனை சமூக நகர்வு எனும் பதம் குறிக்கின்றது. பொதுவாக மனிதர்கள் அவர்கள் சமூகத்தில் கொண்டிருக்கும் அந்தஸ்தினாலும் மற்றும் வசிக்கும் பாத்திரங்களாலுமே அளவிடப்படுகி;ன்றார்கள். மனிதன் சமூகத்தில் தான் கொண்டிருக்கும் அந்தஸ்து உயர வேண்டும் என்பதற்காக பல்வேறு கைங்கரியங்களில் ஆர்வத்தோடு ஒரு சமூக அந்தஸ்திலிருந்து மற்றுமொரு சமூக அந்தஸ்துக்கு ஒரு தனியன் அல்லது தனிநபர்கள் நகர்வதனை சமூக நகர்வு,  சமூகப் பெயர்வு, சமூக அசைவு குறிக்கின்றது என வலஸ் குறிப்பிடுகின்றார்.

  சமூக அடுக்கமைவு - மேலதிக தகவல்கள் 

ஒரு சமூக வகுப்பிலிருந்து மற்றொரு சமூக வகுப்பிற்கு அல்லது ஒரு சமூக படையமைப்பில் இருந்து மற்றொரு சமூக படையமைப்பிற்கு ஒரு தனிநபர் அல்லது ஒரு குழு நகர்வதனை சமூக நகர்வு குறிப்பதாக ஸ்கொட் (W.P.Scott) கூறுகின்றார். ஒரு தனியன் அரசியல் ரீதியாக அதிகாரத்தைப் பெறும் போது அல்லது பணத்தையும் பட்டத்தையும் பெறும் போது அவன் தனிநபர் நகர்வை அடைந்து கொண்டதாக கொள்ளப்படுகின்றது. ஜிம்மி காட்டர் (Jimmy Carter) ஒரு விவசாயியின ; மகனாக இருந்தும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக மாறினார். ஆர்.பிரேமதாச சாதாரண தொரு ஏழையின் மகனாக இருந்தும் இலங்கையின் ஜனாதிபதியாக மாறினார். இப்படி ஏராளமான தனிநபர் வரலாறுகளை தனிநபர் நகர்வுக்கு உதாரணமாக கூறலாம். அதேபோல் சமூக நகர்வு மூலம் ஒரு குழுவில் ஏதாவது நிலை மாற்றங்கள் தோன்றுமானால் அது குழு நகர்வாக கொள்ளப்படுகின்றது.

சமூக நகர்வு குறித்த பல்வேறு வரையறைகளுள் சொறோகினின் வகைப்பாடு முக்கியமானது. அவர், இரு வகையான சமூக அசைவு குறித்துப் பேசுகின்றார்.

01. கிடையான சமூக நகர்வு (u;orizontal social mobility)

02. குத்தான சமூக நகர்வு (Vertial social mobility)

கிடையான சமூக அசைவு

அந்தஸ்தில் மாற்றமில்லாது நிலைப்பாட்டில் (Position)   ஏற்படும் மாற்றம் இதுவாகும். இங்கு அவரது அந்தஸ்து மாற்றமடையாமல் நிலமைதான் மாற்றமடைகின்றது. ஒரு ஆசிரியர் தான் பணியாற்றிய பாடசாலையிலிருந்து விலகி, மற்றுமொரு பாடசாலைக்கு அதே ஆசிரியர் பதவிக்கு செல்வதனை கிடையான சமூக அசைவுக்கு உதாரணமாக கூறலாம். இங்கு அவரது அந்தஸ்து மாற்றமடையவில்லை, மாற்றமாக தொழில் செய்யும் இடம் தான் மாறியிருக்கின்றது.

கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

உண்மையில் கிடையான சமூக நகர்வு குடும்ப வாழ்விலும் சமுதாய உறவிலும் சில உடைவுகளை ஏற்படுத்துகின்றது எனும் கருத்து பரவலாக நிலவுகின்றது. அடிக்கடி நிகழும் இடமாற்றம் தேவையற்ற பல இடர்பாடுகளை சமுதாயத்தில் தோற்றுவிப்பதாக பொதுவாக சுட்டிக் காட்டப்படுகின்றது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வாழும் மக்கள் தூர இடங்களுக்குச் சென்று தொழில் புரிவதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. தான் பிறந்து வளர்ந்த இடங்களை அண்டிய பகுதிகளில் தொழில் புரியவே பெரும்பாலும் விரும்புகின்றார்கள். இலங்கை போன்ற நாடுகளில் ஆசிரியத் தொழிலில் அடிக்கடி இடம்பெறும் இடமாற்றங்கள் பல்வேறு சிக்கல்களை தோற்றுவிக்கின்றது என்பதை பல ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள். உண்மையில் ஆசிரியர் இடமாற்றம் அந்தஸ்தில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை எனினும் அது பல அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றது என்பதே இதற்கான காரணங்களாகும்.

குத்தான சமூக நகர்வு 

ஒரு தனிமனிதன் அல்லது குழு அல்லது மக்கள் ஒரு சமூக அந்தஸ்திலிருந்து மற்றொரு சமூக அந்தஸ்த்துக்கு நகர்வதனை குத்தான சமூக நகர்வு எனும் பதம் குறிக்கின்றது. வகுப்பு, தொழில், அதிகாரம் போன்றவற்றில் இடம்பெறும் மாற்றங்களையே இது குறிக்கினற் து. இம் மாற்றம் ஒரு தனியனின் வாழ்வு முழுவதும் உயர்வு நிலை நோக்கியோ அல்லது தாழ்வு நிலை நோக்கியோ அசைந்த வண்ணமே இருக்கும். ஏழ்மை நிலையினரின் மத்திய வகுப்பை நோக்கிய நகர்வு மற்றும் கடைநிலை ஊழியனாக இருந்த ஒருவர் பதவி உயர்வு பெற்று செல்லுதல் போன்றவற்றை குத்தான சமூக அசைவுக்கு உதாரணங்களாக கூறலாம்.

எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்

 குத்தான சமூக நகர்வு பின்வரும் ஐந்து வடிவங்களைக் கொண்டது.

(அ) மேல் நோக்கிய நகர்வு (Upward mobility) : ஒரு தனியன் அல்லது குழு அந்தஸ்தில் (Status) ஏறிச் செல்வதை அல்லது மேல்நோக்கிச் செல்வதனை இப்பதம் குறிக்கின்றது. ஒரு சில்லறை வியாபாரி மொத்த வியாபாரியாக உயர்வடைதல், ஒரு கொத்தனாரின் (Mason) மகன் கல்வி அடைவின் மூலம் உயர்  உத்தியோகம் ஒன்றினைப் பெற்றக் கொள்ளுதல் போன்றவை இதற்கு உதாரணங்களாகும்.

(ஆ) கீழ்நோக்கிய சமூக நகர்வு (Downward mobility) கீழ்நோக்கிய சமூக நகர்வு ஒருவகை சமூக இறங்கு நிலையை (Social descenane) அல்லது சமூக தோல்வி நிலையை (Social failure) குறிக்கின்றது. எவ்வளவு தான் முயன்றாலும் சில தனியன்களால் உயர்வை நோக்கிச் செல்ல முடிவதில்லை. அதே போல் தனது சமூக, அரசியல், பொருளாதார நிலைகளை தற்காத்துக் கொள்ள முடியாத தனியன்களும் அந்தஸ்த்தை இழந்து கீழ்நிலைக்குச் செல்ல வேண்டியேற்படுகின்றது. இதனையே கீழ்நோக்கிய சமூக நகர்வு எனும் பதம் குறிக்கின்றது. வியாபாரத்தில் மிகப் பெரிய முதலீடுகளை செய்த ஒரு வியாபாரி நஸ்டமடைந்து ஏழையாக மாறலாம். அதே போல் ஒரு உயர் அதிகாரி அவரது ஊழல் நடத்தை காரணமாக பதவியை இழக்கலாம். இவை கீழ்நோக்கிய சமூக நகர்வுக்கான உதாரணங்களாகும்.

(இ) இரு தலைமுறைகளுக்கிடையிலான சமூக நகர்வு

சமூக அசைவிலே தொழிற்படும் காலத்தை அடிப்படையாகக் கொண்டு இரு தலைமுறைகளுக்கிடையிலான நகர்வு (movement between generation) கணிக்கப்படுகின்றது. ஒரு குடும்பத்திலுள்ள அங்கத்தவர்களின் அந்தஸ்தானது அடுத்த தலைமுறைக்குள் எவ்வாறு மாறியிருக்கின்றது என்பதனைக் கருத்திற் கொண்டு இந்நகர்வு கணிக்கப்படுகின்றது. ஒரு சாதாரண விவசாயியின் மகன் ஒரு மருத்துவராக மாறுவதை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இங்கு தந்தையின் தலைமுறையிலிருந்து மகனின் தலைமுறைக்குச் செல்லும் போது அசைவு நிகழ்ந்திருக்கின்றது. ஒரு தலைமுறை மாற்றத்திற்குள் எத்தகைய மாற்றங்களை ஒரு சமூகம் கடந்து வந்துள்ளது என்பதனை இந்த சமூக நகர்வு சுட்டிக் காட்டுகின்றது.

(ஈ) ஒரு தலைமுறையில் நிகழும் சமூக நகர்வு

ஒரு  தலைமுறைக்குள்  நிகழும்  மாற்றத்தை  (Movement   within   one  generation) இந்நகர்வு குறிக்கின்றது. அதாவது ஒரு மனிதன் தனது வாழ்நாளில் சமூக மட்டத்தில் பெறும் அசைவுகளைக் குறிக்கின்றது. சாதாரண மேற்பார்வையாளராக (superviser) ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தவர் பதவி உயர்வு காரணமாக முகாமையாளராக மாறுவதனை இதற்கு உதாரணமாக கூறலாம்.

(உ). கட்டமைப்பு நகர்வு (Structural mobility)

ஒரு தனிமனிதனின் முயற்சிக்கு அப்பால் கட்டமைப்பு மாற்றங்களால் இந் நகர்வு இடம் பெறுவதனால் இதனை ஒரு வகை பலாத்காரப்படுத்தப்பட்ட நகர்வாக (கழசஉநன அழடிடைவைல) கொள்ளப்படுகின்றது. ஊழியச் சந்தையில் தோன்றும் மாற்றங்கள் பலர் தொழில்களை இழக்க காரணமாகுவதையும், அபரிமிதமான குடிவரவால் வர்க்க அமைப்பில் தோன்றும் மாற்றங்களையும் இதற்கு உதாரணங்களாக குறிப்பிடலாம்.

கல்வி உளவியல்   - Click Here

  சமூக அடுக்கமைவு 

எமது கல்வி வீடியோக்கள் பார்த்து பயன்பெற - Click Here

கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்


Post a Comment

0 Comments